வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி

 ⋇#வெந்தயத் #தேங்காய்ப்பால் #கஞ்சி

தேவையானவை:
 பச்சரிசி - 200 கிராம்
 பாசிப்பருப்பு - 50 கிராம்
 வெந்தயம் - 2 டீஸ்பூன்
 தேங்காய்  - ஒரு மூடி (சிறியது)
 பொடியாக நறுக்கிய பெரிய
வெங்காயம் - ஒன்று
 பூண்டு - 7 பல்
 சோம்பு - ஒரு டீஸ்பூன்
 தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
 பட்டை - 2 சிறியது
 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று
 கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 புதினா இலை  - சிறிதளவு
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:
பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விடவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து வைக்கவும். சோம்பு மற்றும் பூண்டுப்பபல்லை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சுடானதும், பட்டை சேர்த்துத் தாளித்து, பூண்டு, சோம்பு சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழை, புதினா இலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு 6 பங்கு தண்ணீர் என்கிற அளவில் அரிசி மற்றும் தண்ணீரை குக்கரில் சேர்க்கவும்.

 இத்துடன் தேவையான அளவு உப்பு, பருப்புக் கலவையும் சேர்த்துக் கலக்கி குக்கரை மூடி பத்து விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும். ஆறியதும் வெந்தய கஞ்சியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும். பிறகு கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:
தேங்காய்ப்பால் சேர்ப்பதற்கு முன்பு கஞ்சி கெட்டியாக இருந்தால், தேவைக்கேற்ப வெந்நீர் சேர்க்கவும். விருப்பப்பட்டால், மிளகுத்தூளும் சேர்த்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment