இளநீர்ப் பாயசம்

 ⋇ #இளநீர்ப் #பாயசம்

தேவையானவை:
 இளநீர் - ஒன்று
 பால் - அரை லிட்டர்
 மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன்

செய்முறை:
இளநீரைத் தனியாகவும், வழுக்கையைத் தனியாகவும் எடுத்து வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து அரை லிட்டர் பாலை 400 மில்லி ஆக குறையும் வரை சுண்ட காய்ச்சவும். மில்க்மெய்டையும் சுண்டிய பாலில் சேர்த்துக் கலக்கவும். இளநீரில் உள்ள வழுக்கையை மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி பால் கலவையில் சேர்த்து இளநீரையும் கலந்து கொள்ளவும். லேசாக சூடானதும் இறக்கிப் பரிமாறவும்.

இனிப்பு வேண்டுமென்பவர்கள் சிறிது சர்க்கரை சேர்த்துக் கரைத்துக்கொள்ளலாம். பாலை இறக்கிவிட்டு, இளநீரை ஊற்றிக் கலக்கிய பிறகும் கிளாஸில் ஊற்றிப் பரிமாறலாம்.

No comments:

Post a Comment