பேலியோ டயட்

*ரொம்ப நாட்களாக பல மக்களும் மருத்துவர்களும் பேலியோ டயட் பற்றி கேட்கும் ஒரே கேள்வி,*

*_"சார், நீங்கள் இவ்வளவு கொழுப்பு சாப்பிட சொல்கிறீர்கள், ஏதாவது மாரடைப்பு வந்து விடாதா?"_*

எந்த மருத்துவர்கள் மாநாட்டிற்கு சென்று பேலியோ டயட் பற்றிய பயன்களை எடுத்துரைத்தாலும், பூமராங் போல வரும் ஒரே கேள்வி,

*_"long term studies - நீண்ட கால ஆராய்ச்சி உள்ளதா?"_*

இதோ வந்தே விட்டது.

*மருத்துவ ஆராய்ச்சியின் பைபிளாக கருதப்படும் lancet ஆராய்ச்சி நூலில் நேற்று(29 august 2017) வந்துள்ள ஆராய்ச்சி கட்டுரை*, பல கோடி மக்களின் வாழ்வினை புரட்டி போடப்போகிறது.

http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(17)32252-3/fulltext

Prospective Urban Rural Epidemiology (PURE) என்று ஒரு ஆராய்ச்சி.

*இந்தியா ஐரோப்பா நாடுகள் உட்பட 18 நாடுகள் (சென்னை உட்பட)*

*வளர்ந்த, வளரும் மற்றும் ஏழை நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள்(1,53,996)*

*2003 முதல் 2013 வரை பத்து வருடங்கள்,*

மக்கள் சாப்பிடும் உணவில், அவர்கள் எவ்வளவு மாவுச்சத்து(carbohydrates), எவ்வளவு கொழுப்பு(fats), எவ்வளவு புரதம் (proteins) எடுக்கிறார்கள், அவர்களுக்கு என்னென்ன நோய்கள் வருகின்றன, எவ்வளவு பேர் இறந்து போகிறார்கள் என்று "பத்து வருடங்கள்" தொடர்ந்து கண்காணித்து வெளிவந்துள்ள மாபெரும் ஆராய்ச்சி.

என்ன சொல்கிறது?

இருப்பதிலேயே *அதிக கொழுப்பு* உணவுகள் உண்டவர்களுக்கு குறைந்த கொழுப்பு உண்டவர்களை விட *23 சதவீதம் இறப்பு குறைவு*.

இருப்பதிலேயே *அதிக மாவுச்சத்து* உண்டவர்களுக்கு குறைந்த மாவுச்சத்து உண்டவர்களை விட *28 சதவீதம் இறப்பு அதிகம்*.

*அதிக மாவுச்சத்து* - மொத்த உணவில் 60 சதவீதம் மேல் மாவுச்சத்து மூலம் பெறுபவர்களுக்கு இருப்பதிலேயே *அதிக சாவுகள்* நிகழ்ந்துள்ளன. (நமது தென் இந்திய உணவில் 80 சதவீதம் மாவுச்சத்து:cry:)

*அதிக saturated fat - நிறை கொழுப்பு (மாமிசம், நெய், வெண்ணெய், தேங்காய், முட்டை முதலியன)* உண்டால் மாரைட்ப்பு வரும் என்று பல காலம் கூறி வந்தார்கள். ஆனால் இந்த ஆராய்ச்சியில் அதிக saturated fat உண்பதற்கும், *மாரடைப்புக்கு எந்த சம்பந்தமும் இல்லை* என்று முடிவுகள் வந்துள்ளன.

அது மட்டுமில்லாமல், *அதிக saturated கொழுப்பு* உண்பது *பக்கவாதம் வருவதை தடுத்து பாதுகாப்பு கொடுக்கிறது* என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும், *அதிக கொழுப்பு* உண்டவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் குறைவதோடு , *non cvd deaths (இரத்த குழாய் அடைப்பு தவிர்த்த மற்ற நோய்கள் - கான்சர், முதலியன) 30 சதவீதம் குறைவாக* வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

கெட்ட கொலஸ்டிரால் என முத்திரை குத்தப்பட்ட *ldl கொலஸ்டிரால்*, நிறைய saturated கொழுப்பு சாப்பிடும் நபர்களுக்கு அதிகமாக இருந்தாலும், அவர்களுக்கு *இருதய நோய்கள் அதிகம் ஆகவில்லை* என்று அப்பட்டமாக நிரூபணம் ஆகியுள்ளது.

மேலும், *கொழுப்பு அதிகமாகவும் மாவுச்சத்து குறைவாகவும் உண்பவர்களுக்கு*,

hdl எனப்படும் நல்ல கொலஸ்டிரால் அதிகம் இருப்பதாகவும்,
triglyceride குறைவாக இருப்பதாகவும்,
apo b/a1 விகிதம் குறைவாகவும்,
triglyceride/hdl விகிதம் குறைவாகவும்

இருப்பதாக தெரியவந்துள்ளது.

எனவே ldl கொலஸ்டிரால் குறைக்க _ஸ்டாட்டின் மாத்திரை தேவையா - இது அடுத்த மிகப்பெரிய கேள்விக்குறி._

மேலும், இருதய நோய்களுக்கு ldl கொலஸ்டிரால் பலிகெடா ஆகி, 20 வருடங்களாக அனைவர்க்கும் ஸ்டாட்டின் மாத்திரை வாரி வழங்கி கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த ஆராய்ச்சியில் என்ன கூறியுள்ளார்கள் என்றால்,

"ldl கெட்டது என்று முன்னர் வந்த முடிவுகள் பெரும்பாலும் ஐரோப்பா அமெரிக்க போன்ற பணக்கார நாடுகளின் ஒருதலைபட்சமான முடிவுகளே."

"இந்தியா உட்பட பல நடுத்தர, ஏழை நாடுகளிலும் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் *ldlக்கும் இருதய நோய்க்கும் பெரிதாக சம்பந்தம் இல்லை* என்றே தெரிய வந்துள்ளது."

*"Ldl ஐ விட்டுவிட்டு, இருதய நோய்க்களுக்கு அதிக காரணமான மாவுச்சத்து - அதிலும் குறிப்பாக இனிப்பு சார்ந்த உணவுகள், கோதுமை, அரிசி, மைதா, தீனி வகைகள் - இவற்றை குறைப்பதிலும், ldl தவிர்த்து மேற்கூறிய மற்ற காரணிகளை நோக்கி கவனத்தை திருப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது"* என்று இந்த ஆராய்ச்சிக்கு முடிவுரை அளித்துள்ளார்கள்.

*_நம்பர், புள்ளி விவரம் எல்லாம் விடுங்க சார்,_*

*_கடைசியா என்ன சொல்ல வரீங்க,_*

*"இன்னுமா புரியல, ஜாலியா பேலியோ பாலோ பண்ணுங்க பாஸ்!!!"*

*Dr. A. Arunkumar, MD(pediatrics),*
*குழந்தை நல மருத்துவர்,*
*ஈரோடு.*
[10:57, 8/30/2017] +91 98941 84563 : *Dr. A. Arunkumar, MD(pediatrics),*
*குழந்தை நல மருத்துவர்,*
*ஈரோடு.*

*ரொம்ப நாட்களாக பல மக்களும் மருத்துவர்களும்
பேலியோ டயட் பற்றி கேட்கும் ஒரே கேள்வி,*

[13:07, 8/30/2017] +91 80569 73320 : https://m.facebook.com/story.php?story_fbid=10209359728901191&id=1562773958 மருத்துவ உலகை புரட்டிப் போட்ட ஒரு ஆராய்ச்சி

Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore

நேற்று(29.8.17) ஒரு முக்கிய தினம். உலகில் பல பகுதிகளில் பல செய்தித்தாள்களில் இந்த நியூஸ் இடம் பெற்றுள்ளது.

"PURE என்ற ஒரு ஆராய்ச்சி, உணவியல் மற்றும் மருத்துவத் துறையை
உலுக்கி விட்டது: அதிக கொழுப்பு சாப்பிடுதல் நல்லது"

இந்தியா உட்பட 18 நாடுகளில் , ஏழு வருடங்களாக 1,35,000 பேரிடம் செய்த மிகப் பெரும் ஆராய்ச்சி இதுவாகும்.

இதில் கண்டுபிடிக்கப் பட்டது:

1. கொழுப்பு ஆபத்தில்லை: நெய், தேங்காய் எண்ணெய், முட்டை, இறைச்சி, சீஸ் போன்ற saturated கொழுப்புகள் எந்த வகையிலும் உடல் நலத்திற்கும் இதய நலத்திற்கும் தீங்கானது அல்ல

2. அதிக மாவுச்சத்து உண்பவர்களுக்கு தான் அதிகளவில் இறப்பு வருகிறது (உதாரணம்:இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி, சர்க்கரை). கம்மி மாவுச்சத்து எடுப்பவர்களை விட இவர்கள் 28% அதிகம் இறக்கிறார்கள்.

3. அதிக saturated கொழுப்பு சாப்பிடுபவர்களுக்கு இறப்பு எண்ணிக்கை குறைவு. கம்மி கொழுப்பு சாப்பிடுபவர்களுக்கு இறப்பு எண்ணிக்கை அதிகம்.

4. அதிக saturated கொழுப்பு சாப்பிடுபவர்களுக்கு ஸ்டிரோக் எனப்படும் மூளையில் ரத்த அடைப்பு வருதல் கம்மியாகிறது.

5. கம்மி மாவுச்சத்து, அதிக கொழுப்பு சத்து எடுப்பவர்களுக்கு Apo B, Triglyceride எனும் கெட்ட கொழுப்புகள் கம்மியாகவும்; HDL & Apo A1 எனப்படும் நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்கவும் செய்கிறது.

மாவுச்சத்து எடுத்தால் உடலுக்கு தீங்கு. கொழுப்பு (பேலியோ டயட்) எடுத்தால் உடலுக்கு நல்லது.

இது ஏதோ ஒரு டப்பா ஜர்னலில் வந்தது இல்லை. The Lancet ல் வந்தது. 200வருடங்களுக்கு முன்னால் இது ஆரம்பிக்கப் பட்டது. உலகின் முதல் மெடிக்கல் ஜர்னலும் இதுவே.

பேலியோ எடுத்தால் நல்லதா என்று கேட்ட காலம் போய், பேலியோ எடுத்தால் மட்டுமே அதிக காலம் ஆரோக்கியமாக உயிர் வாழலாம் என்பதே இந்த ஆராய்ச்சி நமக்கு சொல்கிறது.

http://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(17)32252-3/abstract

Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
[18:44, 8/30/2017] +91 97866 90370 : எடை குறைந்துவிட்டது. ஸ்டக் ஆகி நின்றுவிட்டது? ஏன்? என்ன செய்யவேண்டும்?

இப்படி ஆனால் கீழ்க்கண்ட தவறுகளை செய்கிறீர்களா என பார்க்கவும்.

1) சீட்டிங்: வாரம் ஐந்து நாள் பேலியோ. வீக் எண்ட் பீட்சா, பர்கர், சோறு, குழம்பு என கட்டி ரவுன்டு அடிக்கிறீர்களா? அப்புறம் எப்படி எடைகுறையும்?

100% பரிசுத்தமா இருக்க சொல்லலை. ஆனால் 75% சுத்தம், 25% சீட்டிங் என்றால் 75% எபிசியன்சி என்றே கணக்கு ஆகிறது. 75% எபிசியன்சியில் எப்படி ரிசல்டு வரும்?

ஆக சீட்டிங் செய்வதை குறைக்கவேண்டும். சீட்டிங் சமயமும் தொழில்மயமான உணவுகள் (பீட்சா, பர்கர், இனிப்பு, கோதுமை, பெப்ஸி) எடுக்ககூடாது. வீட்டில் சமைத்த அரிசி தான் சீட்டிங். தொழில்மயமான உணவுகளை உண்ணுவது (உடலுக்கு இழைக்கும்) துரோகம் :-)

2) ஹை கார்ப் பேலியோ:

காலை 5 மணிக்கு பட்டர் டீ, 1 ஸ்பூன் சர்க்கரை - கார்ப் அளவு:20 கிராம்

காலை 8 மணிக்கு 3 முட்டை ஆம்லட், உடன் ஆனியன், தக்காளி- கார்ப் அளவு. 5 கிராம்

11 மணிக்கு: ஒரு கொய்யா- கார்ப் அளவு 8 கிராம்

1 மணிக்கு: 100 பாதாம்- 30 கிராம்

4 மணிக்கு: மீன்டும் பட்டர் டீ- 20 கிராம் கார்ப்

டின்னர்: மட்டன், காரட் பொறியல்- 16 கிராம் கார்ப்

நடுநடுவே தாகத்துக்கு உப்பிட்ட லெமென் ஜூஸ்- ஒரு பழத்தில் ஏழுகிராம் கார்ப்

ஆக கணக்கு போட்டால்-> 106 கிராம் கார்ப் வருது. இதை ஹைகார்ப் பேலியோ எனாமல் எப்படி அழைக்கமுடியும்?

ஆக:

பேலியோ உணவு என்றாலும் கார்பை கட்டுக்குள் வைக்கவேண்டும். 40 கிராமை தாண்டி கார்ப் எடுக்ககூடாது

3) தொடர் கொறித்தல்

காலை ஐந்து மணிக்கு எழுந்து ஒரு பட்டர் டீயில் துவங்கி நடுநடுவே எதையாவது சீஸ், பனீர், கொய்யா என சாப்பிட்டுகொண்டே இருக்ககூடாது

அது பேலியோ உணவாக இருப்பினும்

உங்கள் உடலில் இன்சுலின் கொஞ்சமே கொஞ்சம் சுரந்தால் கூட கொழுப்பை எரிப்பது நின்றுவிடும்

வெறும் வெண்ணெய் மட்டுமே எடுத்தால் கூட அதிலும் இன்சுலின் சுரப்பு ஆகவே செய்யும்..

என்ன கார்பை விட அதன் விகிதம் மிக, மிக குறைவு

ஆனால் உடலுக்கு அதைப்பற்றி கவலை இல்லை. இன்சுலின் தட்டுபடுதா? ஆசிரியரின் சுவடு தெரிந்தால் ஹோம் ஒர்க்கைஉடனே செய்யும் மாணவனை போல இன்சுலினின் சுவடை கண்டதும் கொழுப்பை ஸ்டோரேஜ் செய்யும் மோடுக்கு உடல் போய்விடும்

ஆக:

தினம் 12 மணிநேரமாவது கட்டாயம் விரதம் இருக்கணும்

மூணு மீல்ஸுக்கு மேல் எடுக்ககூடாது

ஸ்னாக் தவிர்க்கவும்..(மிக,மிக,மிக அவசியம் இருந்தால் ஒழிய)

4) போதுமான உறக்கம் இன்மை. இதுவே மன அழுத்தத்தை அளிக்கும்,

5) தய்ராய்டு சிக்கல் உள்ள பெண்கள். இவர்களுக்கு எடைகுறைப்பு ஸ்லோ ஆகும். காரணம் தய்ராய்டு

6) மிக அதீத இன்சுலின் ரெசிஸ்டென்ஸ்

உங்கள் உடலில் இன்சுலி ரெசிஸ்டென்ஸ் மிக அதிகமாக இருந்தால் எடைகுறைப்பு தாமதம் ஆகும். 23:1 இருந்தும்கூட எடைகுறையவில்லை என்பவர்கள் உண்டு. இதற்கு ஒரே வழி வாரியரில் நீள்விரதங்கள் இருந்து இன்சுலின் ரெசிஸ்டென்ஸை குறைப்பதே.

அலுத்துபோய் டயட்டை விட்டால் நிலை மேலும் மோசமாகும்

7) யோ-யோ டயட் (Y0-Yo diet)

மூணு மாதம் பேலியோ, அதன்பின் வீட்டில் விசேசம் என்பதால் 3 மாசம
் பிரேக். மறுபடி மூணுமாசம் பேலியோ, அடுத்து பாரின் ட்ரிப் என்பதால் 1 மாதம் பிரேக்

இப்படிப்பட்ட டயட்டை யோ-யோ டயட் என்போம். இது நாள்போக்கில் கொழுப்பை நிரந்தரமா ஸ்டோரேஜ் செய்துவைத்துகொள்ள உடலுக்கு பழக்கிவிடும்

ஆக நீங்கள் செய்யவேண்டியது:

சீட்டிங் குறைப்பது
கார்பை கட்டுக்குள் வைப்பது
வாரியர் தொடர்வது
தினம் 12 மணிநேரமாவது விரதம் இருப்பது
ஸ்னாக்கிங் செய்யாமல் 3 மீல் மாடலை தவறாமல் பின்பற்றுவது
மிதநடை

இவற்றின்மூலம் எடை குறையும்
[23:37, 8/30/2017] +91 80569 73320 : https://m.facebook.com/story.php?story_fbid=1469056846510820&id=100002195571900 ஆகஸ்ட் 29, 2017

உலக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் என்று கூறினால் அது மிகையாகாது

ஏன்???

உலகம் முழுக்க கொழுப்பை பற்றிய வீண் பீதி பரப்பப்பட்டு அதன் விளைவாக மக்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்த்து வந்தனர்

தம் அன்றாட கலோரி தேவைகளை
புரதம், மாவுச்சத்து மற்றும் கொழுப்பு இது மூன்றைக் கொண்டே நம்மால் அடைய முடியும்

கலோரி என்பது இந்த உணவுகளை நமது உடல் எரித்து கிடைக்கும் சக்தியின் அளவாகும்

ஆக, கொழுப்பை கெட்டது என்றாகிவிட்டது

அடுத்தது புரதம் ...அதற்கும் கிட்னிக்கும் சம்பந்தத்தை உண்டாக்கி அதற்கும் தடை போட்டாயிற்று

பிறகென்ன உலகமே வேறு எதையுமே கண்டிறாததைபோல கடந்த ஐம்பது வருடங்களாக மாவுச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்டு வருகிறது

இன்னும் சொல்லப்போனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 90 சதவிகித உணவுகள் அதிக மாவுச்சத்துள்ள உணவுகளே ஆகும்

ஒருவருக்கு நீரிழிவோ ரத்த கொதிப்போ இதய வியாதியோ வந்தாலும் அவரை கறி முட்டை உண்பதை நிறுத்த சொல்லி அவர் சாப்பிடும் இட்லி தோசை மேரி பிஸ்கட்டை கண்டுகொள்ளாமல் தான் மருத்துவ உலகமும் இருந்தது

ஆன்சல் கீஸ் எனும் அமெரிக்க மருத்துவ ன் 1950களில் ஒளரிக்கொட்டிய ஏழு நாடுகளைக் கொண்டு நடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஒரு பித்தலாட்ட ஆய்வின் முடிவைக்கொண்டு உலகமே கொழுப்பின் மீது பொய் களங்கம் சுமத்தியது

ஆனால் இன்று ஐந்து கண்டங்களில் பதினெட்டு உலக நாடுகளில் வளர்ந்த வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளில் பத்து ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் ஒரு லட்சம் மக்கள் உண்ணும் உணவைக்கொண்டு ஆராய்ச்சி நடத்தி முடித்து உலகின் பிரபலமான மருத்துவ இதழான லான்சட்டில் வெளிவந்துள்ளது

அந்த ஆய்வின் முடிவுகளுள் முக்கியத்துவம் வாய்ந்தவை

1. கொழுப்புணவை அதிகமாக்கி மாவுச்சத்தை குறைத்து உண்பவர்கள் , மாவுச்சத்தை அதிகமாக உண்டு கொழுப்பை குறைத்து உண்பவர்களை காட்டிலும் அதிக ஆயுளுடன் வாழ்ந்தனர்

2. நிறைவுற்ற கொழுப்பான வெண்ணெய், தேங்காய், மாமிசம் போன்றவற்றை உண்டவர்களுக்கு மூளை ரத்த குழாய் அடைப்பு நோய் மிக அரிதாக வந்துள்ளது.

3. தங்கள் அன்றாட உணவில் மாவுச்சத்தின் மூலம் 60 சதவிகித கலோரி தேவையை அடைபவர்களுக்கு கொழுப்புணவை அதிகம் எடுத்து மாவுச்சத்தை குறைத்தவர்களை விட ஆயுள் குறைந்துள்ளது.

4. கொழுப்புணவை அதிகம் எடுத்தவர்களுக்கு கெட்ட கொழுப்பான LDL அதிகமாக இருப்பினும் அது நல்ல LDL ஆக இருப்பதால் இதய நோய் வருவதில்லை

5. மாவுச்சத்தை அதிகம் எடுத்தவர்களுக்கு கொழுப்புணவை அதிகம் எடுத்தவர்களை விட அதிகமாக இதய நோய், மூளை ரத்த குழாய் அடைப்பு, இதய நோய் சம்பந்தமான மரணங்கள் நிகழ்ந்தன

மக்களே இன்று நாம் கொண்டாட வேண்டிய நாள்

ரோஸ்டட் பாதாம எடுங்க கொண்டாடுங்க மக்கா...

No comments:

Post a Comment