நமக்கு ஏன் விக்கல் வருகிறது?

நமக்கு ஏன் விக்கல் வருகிறது?

ஒரு செல் உயிர்->மீன் -> ஆம்பிபியன் (நீர், நிலம் வாழ் பிராணி)->மார்சுபியல்->பாலூட்டி-> ஏப்-> மனிதன்

நம் நாலு பில்லியன் ஆண்டு பரிணாம வளர்ச்சி கதை இதுதான்

இதில் ஒவ்வொரு வகை இனமும் இன்னமும் உள்ளது

மீன்வகை இன்னும் உள்ளது
ஆம்பிபியன் -> முதலை, தவளை இன்னமும் உள்ளது
மார்சுபியல்-> கங்காரு
பாலூட்டிகள், ஏப் ஆகியவையும் இன்னமும் உள்ளன

இதில் கடைசியான வெரைட்டி நாம்தான் என்பதால் மேலே சொன்ன ஒவ்வொரு உயிரினத்துக்கும் இருக்கும் சில பொதுவான பயலாஜிக்கல் அமைப்புகள் நமக்கும் உண்டு. அவற்றில் சில நமக்கு இப்போது பெரும் தொல்லையாக மாறியுள்ளன

உதாரணம் விக்கல். விக்கல் வரும் காரணம் மிக பழமையானது. எத்தனை பழமை? சுமார் 40 கோடி ஆண்டுகள் பழமையானது. நாம் மீனாக இருக்கையில் மூளையின் சிக்னல்கள் சில நம் செவுள்கள்  மூலம் நீருக்கடியில் மூச்சு விட பயன்பட்டன. இப்போது நம்மிடம் செவுள்கள் இல்லை. ஆனாலும் மூளை அந்த சிக்னலை வெளியிடுவதை நிறுத்துவதில்லை. அதனால் நமக்கு விக்கல் தோன்றுகிறது

இதேபோல மீனாக இருந்து மனிதனாக மாறியதால் நமக்கு வரும் இன்னொரு பிரச்சனை குடலிறக்க வியாதி (ஹெர்னியா). மீன்களுக்கு விரைகள் இதயத்தின் அருகே உள்ளன. கருவில் இருக்கையில் நாமும் துவக்கத்தில் மீன்போல தான் இருப்போம் (காண்க படம்) . அதனால் நமக்கும் துவக்கத்தில் கருப்பையில் இதயத்தின் அருகே தான் விரைகள் உள்ளன. ஆனால் நாள்பட, நாள்பட கீழே இறங்கி விரைப்பையில் சேர்கின்றன. அப்போது வயிற்றுக்கும் விரைபைக்கும் இடையே உள்ள ஓட்டை சரிவர மூடபடாமல் பின்னாளில் அங்கே குடல் இறங்குவதால் ஹெர்னியா தோன்றுகிறது (பெண்களுக்கு வரும் ஹெர்னியா வேறு வகை). நாம் மீனாகவே இருந்தால் நமக்கு ஹெர்னியா வந்திருக்காது. இதுவும் 40 கோடி ஆண்டுகால சிக்கல்.

ஒப்பீட்டளவில் 70 லட்சம் ஆண்டுகளாக இருக்கும் சிக்கல் பேறுகால மரணம். அதாவது நாலுகால் பிராணியாக இருந்து இருகாலில் நிற்க துவங்கினோம். இதை பைபெடலிஸம் என்பார்கள். இரு காலில் நடப்பதால் நமக்கு கைகளின் பயன்பாடு கிடைத்தது. ஆனால் அதன் விளைவாக பெண்களின் இடுப்பெலும்பு குறுகியது. அதனால் மற்ற பிராணிகளுக்கு தேவைபப்டாத மருத்துவச்சி உதவி, சிசேரியன் எல்லாமே மனித பெண்களுக்கு தேவைபடுகிறது

அதேபோல வாலையும் ஒரு காலகட்டத்தில் வேண்டாம் என தூக்கிபோட்டுவிட்டோம். வால் இல்லையெனினும் முதுகில் இன்னும் டெயில்போன் என அழைககப்டும் வால் எலும்பு இருந்துகொண்டு நமக்கு முதுகுவலியை வரவழைத்துகொண்டு இருக்கிறது. இது நிகழும் காரணம் விந்தையானது. நாய், பூனை முதலிய மிருகங்கள் பயம் வந்தால், சோகமாக இருந்தால் தம் வாலை இறுக்கி தம் கால்களுக்கிடையே மடித்து வைத்துகொள்ளும். நமக்குதான் வால் இல்லையே? ஆனாலும் வால் எலும்பு அதேபோல அச்சம், சோகம் வருகையில் தசைகளால் இறுக்கபடுகிறது. விளைவு முதுகெலும்பு கோளாறுகள்.

பேசாம மீனாவே இருந்திருந்தா விக்கல், குடலிறக்கம், சிசேரியன், முதுகுவலி என எந்த பிரச்சனையும் இல்லாம ஜாலியா தண்ணில நீந்திகிட்டு இருந்திருக்கலாம் :-)

அடுத்தமுறை விக்கல் வருகையில் இது 40 கோடி ஆண்டுபிரச்சனை என நினைத்து ஆறுதல் அடையவும்  :-) https://www.facebook.com/groups/tamilhealth/permalink/656928297830986/⁠⁠⁠⁠

No comments:

Post a Comment