வல்லாரை

நேற்று பதிவிட்ட வல்லாரை கீரையை பற்றி விட்டு போன  ஒன்றிரண்டு விஷயங்களை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

நாம் நம் குழந்தைகளையும் நல்ல அறிவுடனும் நல்ல  ஆரோக்கியத்துடனும வளர வேண்டும் என்று விரும்புவோம்.

ஆனால் அதற்காக என்ன செய்வதென்று தெரியாமல் கடைகளில் விற்கும் கண்ட  உணவு supplement-களை வாங்கி கொடுத்து விட்டு நம் கடமை முடிந்தது என்று  இருந்து விடுவோம்.

ஆனால் அறிவையும் ஆற்றலையும கூட்டுவதற்காக வாங்கி கொடுத்த  supplement- கள் நம் குழந்தைகளை obesity-ஆக மாற்ற மட்டுமே பயன்படுகிறது.

வல்லாரை கீரை நாம் மறந்து விட்ட  ஒரு மகத்தான கீரை...
கம்ப்யூட்டர் பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும், கம்ப்யூட்டரின் Hard disc-ன் அளவைக் கூட்டாமல் புத்திசாலித்தனமாக  அதை பயன்படுத்துவதன் மூலம் அதை அதிக  வேலை வாங்க முடியும், அதிக விஷயங்களை store  செய்யவும் முடியும்.

மூளையின் திறனை கூட்டுகிறது
(Memory Booster)
வல்லாரை கீரை நாம் கூடுதல் விலை கொடுத்து வாங்கக்கூடிய supplement களைப் அல்லாமல் நமக்கு நோய் எதிர்ப்பு
சக்தியையும் அறிவாற்றலையும் இணைந்தே கொடுக்கிறது.
வல்லாரை கீரை நம் மூளையின் storing capacity-ஐயும் depth-ஐயும் கூட்டும் திறன் வாய்ந்தது. (Brain Defragmenter)

தயார் செய்யும் முறை

வல்லாரை கீரை capsule-களாக வாங்காமல் நீங்களே கீரையாக வாங்கி வீட்டிலேயே நிழல் காய்ச்சலாக காய வைத்து பொடி செய்து, ஹோமியோபதி மெடிக்கல் ஷாப்பில் விற்கும் empty capsules  வாங்கி வந்து அடைத்து அதை அப்படியே உபயோக படுத்தலாம்.

To increase RAM speed
திப்பிலி

எவ்வளவு தான் அதி நவீன கம்ப்யூட்டராக  இருந்தாலும் 1 TB Hard disc உபயோகப் படுத்தி  இருந்தாலும் பயன்படுத்தும் RAM-ன் அளவைப் பொறுத்தே கம்ப்யூட்டரின் வேகம் அமையும்.

மனித மூளையும் அது போலவே...
எவ்வளவு தான் அறிவுத்திறன் இருந்தாலும் அதை சமயத்தில் பயன்படுத்த தெரிய வேண்டும், முடிய  வேண்டும்...
இந்த திறனை அதிகரிக்க திப்பிலியுடன் தேன் கலந்து உபயோகித்துக் கொண்டு வரும்போது மிகச்சிறந்த புத்திசாலிகளாக இருக்க முடியும்.

தயார் செய்யும் முறை
திப்பிலியை கடையில் இருந்து வாங்கி வந்து நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து வாணலியில் போட்டு இளவறுப்பாக வறுத்து எடுத்து பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.  இதுவே திப்பிலியை சுத்தி செய்யும் முறை.

தகவல்: N.மகேஷ் ராஜா.⁠⁠⁠⁠

No comments:

Post a Comment