உடலுக்கு உயிர் எப்போது வருகிறது?

இந்த உடலுக்கு உயிர் எப்போது வருகிறது? இதை தெய்வ சித்தர்களான அகத்தியரும் திருமூலரும் என்ன அழகாக விளக்குகிறாரகள்..... (Baby's Heart Beat)

முதல் மூன்று மாதங்கள் வரை நமது தாயின் கருவில் நாம் வெறும் பிண்டங்கள்தான். மூன்றாம் மாத முடிவில்தான் கருவிற்கு தாயின் தொப்புள் கொடியில் இருந்து உயிர் வருகிறது. இதைதான் அகத்தியர்...

”யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யாரையுங்கால்கள் ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே” - அகத்தியர்.

உயிரின் உரிபொருள்கள் (ingredients):
**************

அது சரி அந்த உயிரில் என்னவெல்லாம் இருக்கும்? இந்த கேள்விக்கு திருமூலர் திருமந்திரத்தின் மூலம் பதில் சொல்லுகிறார்.

"போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடாவிடின் பன்றியும் ஆமே.' - திருமந்திரம் 266

இப்பாடலில் திர்மூலர் பாடும் கணக்குதான் என்ன?

போகின்ற எட்டு (8), புகுகின்ற பத்தெட்டு (10+8=18) ஒன்பது வாய்தல் (வாயில்கள்).

போகின்ற 8:
******

சுவை, ஒளி, ஊறு, ஓசை, வாசம், மனம், புத்தி, அகங்காரம்.

புகுகின்ற பத்தெட்டு (10+8=18)
************

பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன், காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம், துன்பம்.

ஒன்பது வாய்தல் (வாயில்கள்):
*************

வலது கண், இடது கண், வலது நாசி, இடது நாசி, வலது காது, இடது காது, வாய், குதம், பிறப்புறுப்பு.

மூன்று மாதங்கள் நிறைவடையும் போது கருவுக்குள் இவை அணைத்தும் தாயின் தொப்புள் கொடியில் இருந்து உயிராய் சென்றடைகிறது. இதன் பின்னறே அந்த கருவிற்கு கை, கால், செவி, கண் என் பிற உறுப்புகள் தோன்றுகிறது. கருவிலும் அசைவுகள் தென்படுகிறது.

 இதைதான் இன்றைக்கு மருத்துவர்கள் Scan செய்து பார்த்துவிட்டு குழந்தைக்கு Heart beat வந்துவிட்டதுன்னு சொல்றாங்க.

ஒருவேல சித்தர்கள் இதையும் குத்து மதிப்பா சொல்லியிருப்பாங்களோ? இப்படி குதர்கமா யோசிக்கும் நபர்கள் நல்ல மருத்துவரை சந்தித்து விளக்கம் பெறவும்.

இவ்வரிகளின்படி ஆண் பெண் இருவரும் உயிர் உடலுக்கான மூலப்பொருளை மட்டுமே வழங்குகிறோம் மற்றவை சுயம்பாகவே தன்னை உருவாக்கி கொள்கிறதென்பது தெளிவாகிறது...

திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் யோக சுக்சுமங்களும் தொடரும்..?

- சித்தர்களின் குரல் shiva shangar

No comments:

Post a Comment