குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை

குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை  காஸ்ட்லியாக இருக்கிறதே?

எளிய மக்களால் கடைபிடிக்க ஏதுவாக இல்லையே என்பது பலரின் ஏக்கமாக இருக்கிறது

உண்மையில் வளர்ந்த நாடென்பது யாதெனில் அதன் குடிமக்கள் தங்களது தனிநபர் வருமானத்தில் 30 முதல் 40 சதவிகிதத்தை உணவுக்கு செலவு செய்ய வேண்டும்

ஆனால் இந்தியாவில் நாம் சுமார் 10 முதல் 15 சதவிகதிங்களை தான் உணவுக்கு செலவு செய்கிறோம்.

சரி பேலியோ உணவு முறையை எப்படி எளிமையானதாக
 ஆக்கிக்கொள்ள முடியும் ???

இதோ

காலை உணவாக பட்டர் டீ எடுங்கள்
250 மில்லி தண்ணீர்/பால் -  ₹10
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் - ₹2
30 கிராம் வெண்ணெய் - ₹20

செலவினம் - ₹32

மதியம் - 300 கிராம் காய்கறிகள் - ₹30
                 30 கிராம் வெண்ணெய் - ₹20
                 முட்டை இரண்டு - ₹10
செலவினம் - ₹ 60

இரவு
கோழி கறி 250கிராம் - ₹30

ஸ்நாக்ஸ்
கொய்யா காய் - ₹5
க்ரீன் டீ - ₹5
தேங்காய் - ₹5

மொத்தம் - ₹137

பிரதி மாதம் ₹137 * 30 = ₹4110

 இந்த உணவு முறையில் இருப்பதால்
தேவையற்ற பல ஜங்க் உணவுகளை நாம் தவிர்ப்போம்
ஆகவே கிட்டத்தட்ட இதற்கு மேல் செலவினம் ஆகாது என்றே கூறலாம்

மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த டயட்டில் இருந்தால் செலவு இன்னும் குறையும் வாய்ப்பு உண்டு

நாம் நமது பழைய உணவு முறையில் தினமும் மூன்று வேலை உண்ணும் போதும் குறைந்தபட்சம் ₹100 செலவாகும் ( பிரதிமாத செலவு ₹3000)

மேலும் பேலியோவை உணவு முறையில்
இருக்கும் போது நீரிழிவு ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கு அந்தந்த நோய்களுக்கான மருந்து தேவை குறைகிறது
இது மருத்துவ செலவை குறைக்கிறது

மருத்துவ செலவினத்தையும் கழித்துவிட்டு பார்த்தால்
இந்த பேலியோ உணவு முறை எகனாமிக்காக இருப்பதை உணரலாம்

பேலியோவை பின்பற்றுவது பல தொற்றா நோய்களில் இருந்து நம்மை காக்கிறது

பிற்காலத்தில் ஆகப்போகும் பெரும் மருத்துவ செலவினங்களை குறைக்கிறது

நம்மில்  பலருக்கும் பேலியோவை  பின்பற்ற மனம் ஒன்றே தடையாய் இருக்கிறது

பேலியோவுக்கு வாருங்கள்
ஆரோக்கியத்தை மீட்டெடுங்கள் Dr farook                        

No comments:

Post a Comment