இரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்

 இரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்

ரத்தத்தில் கால்சியம், இரும்பு சத்து குறைவால் வளர் இளம் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் ரத்த சோகை ஏற்பட்டு முகம் வெளிறி காணப்படுவர். ""ஹீமோகுளோபினை அதிகரிக்க நெல்லிக்காய் ஜாம் தொடர்ந்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெறலாம்,'' .
தேவையான பொருட்கள்: ஒரு கிலோ நெல்லிக்காய், 1.25 கிலோ வெல்லம், சுக்கு 25 கிராம், ஏலக்காய் 10 கிராம்.

செய்முறை: நெல்லிக்காயை 700 மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும். வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் பாகுபோல் காய்ச்சவும். கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து, கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகு உடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது நெல்லிக்காய் ஜாம் ரெடி. இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து விடலாம்.

மருத்துவ பயன்கள்:
வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள் இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும்.
இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்                      
[1:24 PM, 5/31/2017] +91 97866 77233: நீங்சைகள் வமா- ரசாயன விஷமேற்றிய உணவு உற்பத்தி.  அதனால் வரும் நோய்கள். இல்லை அசைவமா- ரசாயனக் கழிவுகள் பிளாஸ்டிக்கைத் தின்னும் விலங்குகள். அதனால் வரும் நோய்கள். மொத்தத்தில் இன்றைய நிலையில் சைவமோ அசைவமோ நல்ல உணவைத் தேடும் நிலைக்குத் தள்ளப் பட்டோம். அடுத்து நல்ல உணவே கிடைக்காத நிலைக்கு தள்ளப்படுவோம். இது நாளைய நிலை. கொஞ்சம் யோசித்தால் நாம் பிறக்கும் போது இந்த நிலை ஆரம்ப கட்டத்தில் தான் இருந்திருப்போம். ஆனால் நமக்கு முன் சந்ததி இதை சிந்திக்காததன் விளைவு தான் இது. இன்னும் ஆழமாக யோசித்தால் நம் எல்லோரையும் வெளிநாட்டு மருந்து கம்பெனிகளுக்கு நம்மை ஆள்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விற்றுக் கொண்டிருப்பது தெரிய வரும். என் கருத்து: உணவை மருந்தாக்கும் முன் விஷமில்லா உணவை உற்பத்தி செய்ய நாம் ஊக்குவிக்க வேண்டும். (நம் முக்கிய உணவான அரிசி கூட விஷமானது தான் வேதனை. நம் மருந்தான உணவை எல்லாம் அன்னியனிடம் என்னிக்கோ வித்தாச்சு. பாசுமதி, மிளகு,  வேம்பு இன்னும் பல.). நான் சிந்திக்க தொடங்கி விட்டேன். நீங்க?.

No comments:

Post a Comment