பூந்திக்கொட்டை
நுரை பொங்க குளித்துவிட்டு வந்தால்தான், குளித்தது போன்ற புத்துணர்ச்சி உண்டாகிறது என்ற மாயை அனைவரிடமும் நிலவிவருகிறது. பழங்காலத்தில் நுரை தரக்கூடிய பொருட்களை, குளியல் பொடியில் பயன்படுத்தினர். செம்பரத்தை பூ, துளசி, சுரை, பீர்க்கு குடுவைகள், வாழை மட்டை போன்றவை நுரை மற்றும் வழுவழுப்பு தருவதால், குளியல் பொடிகளில் இவற்றை பயன்படுத்தி குளித்து மகிழ்ந்தனர். ஆனால் இவற்றை உடனடியாக பயன்படுத்த வேண்டும். உலர்ந்தபின் பயன்படுத்தினால் இதன் நுரைப்புத்தன்மை மாறிவிடுவதுண்டு. இதுபோன்ற நடைமுறை சிக்கல்களால், இவற்றின் பயன்பாடு குறைந்து சோப்பின் ஆதிக்கம் அதிகரித்தது.
நாம் பயன்படுத்தும் குளியல்பொடி மற்றும் கேசப்பொடிகளில் இயற்கையின் கலவை அதிகமாக இருந்தால் தான், நமது தோலும், கேசமும் ஆரோக்கியமாக இருக்கும். கேசத்திற்கு பளபளப்பையும், தோலுக்கு வழுவழுப்பையும் தந்து நுரை பொங்க குளித்த திருப்தியை தரும் மூலிகை தான் பூந்திக்கொட்டை.
சபின்தஸ் எமார்ஜினேட்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சப்பின்டேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த மரத்தின் உலர்ந்த பழங்கள் பூந்திக்கொட்டை என்றும் பூவந்திக்கொட்டை என்றும், சோப்புக்காய் என்றும் அழைக்கப்படுகின்றன. இதன் பழத்தோலில் உள்ள சப்போனின்கள், சப்பின்டோசைடுகள், ஹெடராஜெனின்கள் மற்றும் டெர்பினாய்டுகள் பூஞ்சை கிருமிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, தோலுக்கு பிரகாசத்தையும் மென்மையும் உண்டாக்குகின்றன. உசிலை இலை, இலுப்பை பிண்ணாக்கு, ரோஜாப்பூ, செம்பரத்தை பூ, செம்பரத்தை இலைகள், சிகைக்காய், வெட்டிவேர், விளாமிச்சம் வேர், நன்னாரி, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, வெந்தயம், பூந்திக்கொட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, நுண்ணியதாக அரைத்து, துணியில் சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இதை நீரில் குழப்பி, சற்று நேரம் வைத்திருந்து, பின் தலை மற்றும் உடலில் தேய்த்து குளித்துவர நுரை உண்டாகி, அழுக்கு நீங்கி, தோலும், கேசமும் சுத்தமடையும்.
வீட்டில் ஏற்கனவே வேறு குளியல் பொடி உபயோகப்படுத்துபவர்கள் பத்தில் ஒரு பங்கு பூந்திக்கொட்டை பொடியை கலந்துகொள்ளலாம். பூந்திக்கொட்டையை லேசாக வறுத்து, மேற்தோலை உரித்து, இடித்து வைத்துக் கொண்டு அவ்வப்போது சோறு வடித்த கஞ்சி அல்லது சீயக்காய் தூளுடன் கலந்து தலையில் தேய்த்து, அலசி, குளித்துவரலாம்.

No comments:
Post a Comment