கருவேப்பிலை குழம்பு

கருவேப்பிலை குழம்பு /curry leaves kulambu

மிகவும் எளிதான சுவையானது இந்த குழம்பு . உடலுக்கு மிகவும் ஏற்றது . சளி இருமலுக்கு மிகவும் நல்லது .....


தேவையான பொருட்கள் :

கருவேப்பிலை - 3/4 கப்

பூண்டு - 10 பல்

புளி- நெல்லிக்காய் அளவு
வறுத்து அரைக்க :

காய்ந்த மிளகாய் - 4

வெந்தயம் - 1/4 ஸ்பூன்

மல்லி - 1/ 4 ஸ்பூன்

க.பருப்பு - 1ஸ்பூன்

உ.பருப்பு - 1 ஸ்பூன்

தாளிக்க :

 கடுகு -1 ஸ்பூன்

வெந்தயம் - 1/4 ஸ்பூன்

உ . பருப்பு - 1/2 ஸ்பூன்

ந.எண்ணெய் - தேவைக்கு

செய்முறை :

முதலில் வறுத்து அரைக்க வேண்டியவற்றை வறுத்து அதனுடன் கருவேப்பிலை சேர்த்து  அரைத்துக்கொள்ளவும் .பூண்டு , கருவேப்பிலையை சுத்தம் செய்து வைக்கவும் .பின் கடாயில் எண்ணெய் விட்டு ,அதில் கடுகு ,உ.பருப்பு , வெந்தயம் சேர்த்து தாளித்து ,பூண்டையும் சேர்த்து வதக்கவும் .பின் இதனுடன் புளி கரைசல், அரைத்த விழுது சேர்த்து  15 நிமிடங்கள் கொதிக்க விடவும் ..மணமணக்க கருவேப்பிலை குழம்பு தயார் ... சூடான சாதத்துடன் பரிமாறவும் .

No comments:

Post a Comment