தீபாவளி லேகியம்

தீபாவளி லேகியம்

தீபாவளியன்று ஏகப்பட்ட பட்சனங்களை செய்து, வயிறு புடைக்க சாப்பிட்டு முடித்த பின்னர் பட்டாசையும் கொளுத்தி கொண்டாடிய பின்  முக்கியமான ஒரு மேட்டர் உள்ளது. அதுதான் தீபாவளி லேகியம்.

சாப்பிட்ட இனிப்புகள் ஜீரணமாகி வயிறு பத்திரமாக இருக்க வேண்டுமல்லவா, அதற்குத்தான் இந்த தீபாவளி லேகியம்

என்னென்ன தேவை?

சுக்கு – ஒரு துண்டு

மிளகு, சீரகம், தனியா,

ஓமம் – தலா ஒரு டீஸ்பூன்

கண்டந்திப்பிலி – 8

ஏலக்காய் – 2

சித்தரத்தை – 3 துண்டுகள்

அரிசி திப்பிலி – 4

ஜாதிக்காய் – ஒன்று

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

வெல்லம் – 200கிராம்

நெய் – 3 டீஸ்பூன்

தேன் – ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

நெய், தேன் தவிர்த்த மருந்துப் பொருட்கள் ஒவ்வொன்றையும் அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு லேசாக வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் நன்றாக அரைத்துப் பொடியாக்கிக்கொள்ளுங்கள்.

வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டுக் கரைத்து, வடிகட்டுங்கள். அதை கம்பிப் பாகு பதத்துக்குக் காய்ச்சுங்கள். பொடித்துவைத்த மருந்தை வாணலியில் போட்டு, மூழ்கும்வரை தண்ணீர் ஊற்றி, இரண்டு நிமிடம் கொதிக்கவையுங்கள். அதில் வெல்லப்பாகைச் சேர்த்துக் கைவிடாமல் கிளறுங்கள். நெய்யைக் கொஞ்சம், கொஞ்சமாகச் சேர்த்து லேகியம் நல்ல பதத்துக்கு வரும்போது, தேன் சேர்த்துக் கிளறி இறக்கிவையுங்கள். இந்த லேகியம், வயிற்று உபாதைகளை நீக்கிப் பசியைத் தூண்டும்

No comments:

Post a Comment