சீயக்காய்ப்பொடி தயாரிக்கும் விதம்

சீயக்காய்ப்பொடி தயாரிக்கும் விதம்

தற்போது நம்முடைய அனைத்து விதமான முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு காரணம் நாம் உபயோகிக்கும் ஷாம்பூ, ஹேர் ஆயில் மற்றும் தலை முடிக்கான கிரீம்கள், ஹேர் டை ஆகியவை  ஆகும். இவற்றை எல்லாம் தவிர்த்து இயற்கையான தேங்காய் எண்ணெய், சீயக்காய் போன்றவற்றிற்கு மாறினாலே போதும்...  நம் பாட்டி தாத்தாமார்களை போல சாகும் வரை முடி நரைக்காமலும், கொட்டாமலும் வாழ முடியும். இத்துடன் நம் உணவு முறையையும் கண்டிப்பாக மாற்ற வேண்டும்.

சீயக்காய்ப்பொடி:

கறிவேப்பிலை-ஒருகை
துளசி இலை- ஒரு கைப்பிடி
பூந்திக்கொட்டை-100கிராம்  [உள்ளே இருக்கும் கொட்டையை நீக்கி விட்டு தோலை மட்டும் உபயோகிக்கவும்]
கரிசலாங்கண்ணி- 50கிராம்
பொடுதலை சமூலம்- 6 கிராம் [நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்]
செம்பருத்தி பூ-10
ஆவாரம்பூ- 5 பிடி
உலர்ந்த ரோஜா-20
எலுமிச்சை தோல்- 10 மூடி
ஆரஞ்சு தோல்- 4
பச்சைப்பயிறு- 50 கிராம்
வெந்தயம்- 50 கிராம்
வெட்டி வேர்- 25 கிராம்
சீயக்காய்- ஒரு கிலோ

இவைகளை நல்ல வெய்யிலில் காயவைத்து ஒன்றாக அரைக்கவும்.

நாட்டு மருந்து கடையில் அல்லது காதி கடைகளில் உசிலம்பொடி என்ற ஒரு மூலிகைப் பொடி கிடைக்கும். இது நுரையும் குளிர்ச்சியும் தரக்கூடியது. 2 ஸ்பூன் சீயக்காய்ப்பொடிக்கு அரை ஸ்பூன் உசிலம்பொடி என்ற அளவு கலந்து குளித்தால் தலைமுடிக்கு நல்லது.

No comments:

Post a Comment