#கர்ப்பப்பை (பைபிராய்டு) கட்டிக்காக கர்ப்பப்பை அகற்ற தேவையில்லை
கருப்பை கட்டி ஏன் உருவாகிறது
என்ன அறிகுறிகள்
என்ன சிகிச்சை (முழுமையான பார்வை)
♥தாய்மை... இதற்கு நிகர் வேறு எதுவுமில்லை. தாய்மைக்கு முன்பும், தாய்மைக்கு பின்பும் பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் எவ்வளவோ வலிகளை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் முக்கிய பிரச்னை கர்ப்பப்பையில் ஏற்படும் பைபிராய்டு எனப்படும் கட்டிகள்தான்.
♥தற்போதைய காலகட்டத்தில், பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பப்பையில் கட்டி வளர்கிறது. இதனால், கர்ப்பப்பையையே இழக்கும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
♥ஆனால், மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் கர்ப்பப்பையை அகற்றாமலேயே பைபிராய்டு கட்டிகளை மிக எளிதாக அகற்றி விடலாம் என்கிறார் உலகத்தமிழ் மங்கையர் மலருக்காக பாரத் ஸ்கேன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் டாக்டர் இம்மானுவேல். இதைப் பற்றி டாக்டர் இம்மானுவேல் சொல்கிறார்...
♥கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டிகள், கேன்சர் கட்டிகள் என நினைத்து பெண்கள் அச்சப்படுகிறார்கள். இந்த அச்சம் தேவையில்லை. சுரப்பிகள் மாற்றத்தால் இத்தகைய கட்டிகள் ஏற்படுகின்றன. தவிர, இவை கேன்சர் கட்டிகள் கிடையாது. பொதுவாக 25 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு பைபிராய்டு கட்டிகள் ஏற்படும்.
♥4 பெண்களில் ஒருவருக்கு இத்தகைய கட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இந்த கட்டிகள் ஆண்டுக்கு ஒரு செ.மீ. அளவுக்கு வளரும் தன்மை கொண்டவை.
#அறிகுறிகள்
♥கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்பட்டால், அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் நேரத்தில் அதிக நேரம் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, மூச்சு திணறல், மயக்கம் வருதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மேலும், முதுகு வலி, கால் உளைச்சல், அடி வயிறு வலி போன்றவையும் ஏற்படும். கட்டி பெரிதாக, பெரிதாக பெண்கள் இன்னும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது.
♥கட்டிகளின் அழுத்தம் காரணமாக அடிக்கடி சிறுநீர் வரும். சிறுநீரை தாங்கிக் கொள்ள முடியாது. அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஒரு சிலருக்கு நீண்ட நேர இடைவெளிக்கு பிறகே சிறுநீர் வரும். அதே போல, மலச்சிக்கலும் ஏற்படும். மலக்குழாயை கட்டிகள் அடைப்பதால், வயிறு உப்புதல், முதுகு வலி போன்றவை ஏற்படும். மாதவிடாய் நேரத்தில் அதிக வலி ஏற்படும். உடலுறவின் போதும் அதிக வலி இருக்கும்.
♥இந்த வலிகளை எல்லாம் பெரும்பாலான பெண்கள் தாங்கிக் கொண்டுதான் வாழ்க்கை நடத்துகிறார்கள். காரணம்... தாய்மை என்கிற ஒரே காரணத்துக்காகதான். இந்த வலியிலிருந்து விடுபட வேண்டுமென்றால் ஆபரேஷன் செய்து கர்ப்பப்பையை அகற்றுவதுதான் தீர்வாக இருந்து வந்தது.
♥அவ்வாறு ஆபரேஷன் செய்தால் அதன் பிறகும் சிறுநீர் பிரச்னை, வயிற்று வலி போன்ற பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும்.
♥அதைவிட, தாய்மை அடையும் பாக்கியத்தை இழந்துவிட்டோமே என நினைத்து மனரீதியாக பெண்கள் உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியை இழக்கிறார்கள். மேலும் ஆபரேஷனுக்கு பிறகு 4 மாதம் ஓய்வில் இருக்க வேண்டும்.
♥அந்த நேரத்தில் யார் குழந்தைகளையும், கணவரையும் கவனித்துக் கொள்வது, ஆபரேஷன், மருத்துவமனையில் தங்குவது என நிறைய செலவாகுமே என்று நினைத்து பல பெண்களும் ஆபரேஷன் செய்து கொள்ளாமல் வலியுடனே வாழ்கிறார்கள்.
♥இப்போது அந்த கவலை எல்லாம் தேவையில்லை. கர்ப்பப்பை கட்டியால் அவதிப்படும் பெண்களுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ளது லேட்டஸ்ட் மெஷின் இந்த தொழில்நுட்பத்தில் ஆபரேஷன் கிடையாது. மயக்க மருந்து கிடையாது. தழும்பு கிடையாது. ரத்த இழப்பு இல்லை. கதிரியக்கம் இல்லை. முக்கியமாக கர்ப்பப்பை பாதிக்கப்படுவதில்லை, பாதுகாக்கப்படுகிறது.
♥2 அல்லது 3 மணி நேரத்தில் பைபிராய்டு செல்களை அழித்து விடலாம். சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமும் இல்லை. மறுநாளே வேலைக்கு போகலாம். சிகிச்சை முடிந்த 6 மாதத்துக்குள் பைபிராய்டு கட்டிகள் முழுமையாக தானாகவே கரைந்து விடும்.
♥அதுவரை எந்த தொந்தரவும் இருக்காது. இந்த சிகிச்சை முறை மிகவும் பாதுகாப்பானதும் கூட. வெளிநாடுகளில் கடந்த 2000ம் ஆண்டில் இருந்தே இந்த சிகிச்சை முறை இருந்து வருகிறது.
#சிகிச்சை எப்படி?
♥எம்ஆர்ஐ ஸ்கேன் மெஷினுடன் ஃபோகஸ்ட் அல்ட்ரா சவுண்ட் உபகரணம் பொருத்தப்பட்டிருக்கும். இதில், சிகிச்சை க்கு வருபவர் படுத்துக் கொள்ள வேண்டும். ஃபோகஸ்ட் அல்ட்ரா சவுண்ட் உபகரணம், வயிற்றுப் பகுதியில் பைபிராய்டு கட்டிகள் எங்கிருக்கின்றன என்பதை ஆராய்ந்து தெளிவுபடுத்தும்.
♥அதனை மருத்துவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன் மானிட்டர் கவனித்து, ஃபோகஸ்ட் அல்ட்ரா சவுண்ட் உபகரணம் மூலம் வெப்பத்தை உண்டாக்குவர். இந்த வெப்பத்தின் மூலம் பைபிராய்டு செல்கள் அழிக்கப்படும். சிகிச்சையின் போது, எந்த வலியும் இருக்காது.
♥தாய்மைக்காக பிரசவநேரத்தில் மட்டும் இல்லை.... வாழ்நாள் பூராவும் வலியை சுமப்பவள் தான் பெண்.
கணவன்மாரே... பிள்ளைகளே... உங்கள் மனைவியை .. அம்மாவை நேசியுங்கள்.. ஆதரவுகரம் கொடுங்கள்... உங்களை உருவாக்கிய தெய்வம்... உங்களிடம் எதிர்பார்ப்பது வெறும் அன்பை மட்டுமே.
♥உலகத்தமிழ் மங்கையர் மலர்♥

No comments:
Post a Comment