சிறுநீர்

கரிசலாங்கன்னி சாற்றை காலை வேளையில் தினம் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

இதன் மஞ்சள் பூவுடைய இலை 10,வேப்பிலை 6, கீழாநெல்லி இரண்டு இணுக்கு துளசி 4,இலை சேர்த்து நன்றாக மென்று காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மோர் அரிசிக் கஞ்சி சாப்பிடலாம். 10 லிருந்து- 20 நாளில் காமாலை சோகை நீர் சுரவை வீக்கம், கண், முகம் வெளுத்தல் ஆகியன குணமாகும். ஊளைச் சதை குறையும், சிறுநீர்த் தடை, எரிச்சல், கை, கால், பாதம் வீக்கம் குணமாகும்.

மணத்தக்காளிக் கீரையுடன்                     (ஒரு கைப்பிடி) ,பார்லி (ஒரு ஸ்பூன்), மஞ்சள் (4 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்ததுவந்தால்  நீர்ச் சுருக்கு , நீர் எரிச்சல் , சிறுநீர் பிரியாமை போன்ற குறைபாடுகள் சரியாகும்

அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

வெள்ளரி, முள்ளங்கி , வாழைத்தண்டு , மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சாறு எடுத்து குடித்தால் சிறுநீரக கற்கள் கரையும், நீர் அடைப்பு, நீர்கட்டு போன்றவையும் விலகும்..

வெள்ளரி விதையுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் சிறுநீர் அடைப்பு , சதை அடைப்பு , சிறுநீர்க் குழாய் எரிச்சல் போன்றவை குணமாகும்.

No comments:

Post a Comment