வெந்நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

வெந்நீர் குடிப்பதால் இத்தனை
நன்மைகளா?

வெந்நீரின் மகத்துவம் பற்றி நம்முள் பலருக்கு
தெரியாது.   காரணம் நாம் தண்ணீர் குடிக்கும் அளவே மிக
குறைவுதான்..நம்மில் யார்தான் அதிக நீரை ஒரு
நாளைக்கு பருகுகின்றோம்?கிடைக்கும் நேரத்தில்
சாப்பிட்டு முடித்தாலோ தாகம் எடுத்தாலோ தவிர
மற்றும்படி நாம் நீர் பருகுவது குறைவு. தண்ணீர்
குடிப்பதே குறைவெனும் போது வெந்நீரை எப்பிடி
பருகியிருக்கப்போகிறோம்?
வெந்நீரில் அதிக நம்மைகள் இருப்பது யாருக்கும்
தெரியாமலே போய்விட்டது.  தினமும் வெந்நீரை
காலையில் பருகுவது உடல் நலத்திற்கு சிறந்தது.
வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி
இப்போது பார்க்கலாம்
* வெந்நீர் குடிப்பதால் உடலில் இரத்த ஓட்டம் சீராவது
மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள
கொழுப்புகளும் குறைந்துவிடும்.
* பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலத்தில்
வெந்நீர் குடித்து வந்தால் வலி ஏற்படாது.
* சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து
வந்தால், வாயுத் தொல்லையே இருக்காது.
* காலையில் மலம் கழிப்பது கடினமாக இருப்பின் ஒரு
டம்ளர் வெந்நீர் குடித்தால் மலச்சிக்கல் இருக்காது.
* அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம்
உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே
வராது.
* வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க,
மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக்
குடிப்பது நல்லது.
* அதிகமாக சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால்,
சாப்பிட்ட உணவு விரைவில் ஜீரணமாகி விடும்.
* உடற்பயிற்சியின் பின்போ அல்லது தாகம் எடுத்தாலோ
சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடலிலுள்ள
தேவையற்ற கழிவுகள் வெளியேறிவிடும்.
* சாப்பிடுவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பு
வெந்நீர் குடித்து வந்தால் அதிகளவு பசி
எடுக்காது.அதனால் உடல் எடை குறைவதற்கான
வாய்ப்புக்கள் அதிகம்.⁠⁠⁠⁠

No comments:

Post a Comment