தூக்கமின்மை

தூக்கமின்மை தான் பல நோய்களுக்கு காரணமாக இருக்கிறது

தூக்கமின்மையை விரட்டவும்
நல்ல தூக்கத்தைப் பெறவும்

முத்தான பத்து யோசனைகள்

1. அன்றாடம் சரியான நேரத்தில் படுத்துறங்கி சரியான நேரத்தில் விழிக்க வேண்டும்
(இரவு 10 முதல் காலை 6 வரை அல்லது இரவு 11 முதல் காலை 7 வரை)
6 முதல் 8 மணிநேர உறக்கம் உடலுக்குத் தேவை

2. மாலை நேரங்களில் தேனீர் மற்றும் கொட்டைவடி நீர் ( coffee) அருந்துவதை தவிர்க்கவும்

3. இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணிநேரம் முன்பாவது தொ(ல்)லைக்காட்சி , செல்லிடப்பேசி , மடிக்கணிணி முதலியவற்றை காண்பதை நிறுத்திவிட வேண்டும்.
" பார்வை நரம்புகள் மற்றும் மூளையில் உள்ள பார்வை மண்டலம் தூண்டப்பட்டால் எளிதில் உறக்கம் வராது"

4. இரவு உணவை பிச்சைக்காரன் போல உண்ணவேண்டும் . வயிறு முட்ட முட்ட தின்றுவிட்டு உறங்கச்சென்றால் உறக்கம் வராமல் கன்னாமூச்சி காட்டும்.

5. அதற்காக வயிறை பட்டினியாக வைத்துக்கொண்டும் தூங்க முடியாது. அளவாக உண்ண வேண்டும்.

6.தினமும் 20 நிமிடமேனும் உடற்பயிற்ச்சி செய்யலாம். உறங்கும் நேரத்திற்கு 4 மணிநேரத்திற்கு முன்பே உடற்பயிற்ச்சியை முடித்து விட வேண்டும்.

7. உறங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்பு தண்ணீர் பருகுவதை நிறுத்தி விட வேண்டும். மது அருந்தக்கூடாது .

8. படுக்கயறையை விளையாட்டு மைதானம் போல ஒளி வெள்ளத்தில் வைத்திருக்கக் கூடாது . ஒளியின் அளவை மிகவும் குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும். படுக்கயறையில் தொலைக்காட்சி , ஒலிப்பெருக்கி சாதனங்கள் இருக்கக் கூடாது .

9. நன்றாக உறங்க நல்ல படுக்கையும் தலையைணையும் அவசியம். அதற்காக கொஞ்சம் பொருளாதாரத்தை செலவு செய்வதில் தவறில்லை

10. கடிகாரத்தை பார்த்து உறங்கச்செல்லக்கூடாது . உங்கள் உடலின் கடிகாரத்தை உள்வாங்கி அது கேட்கும் நேரத்தில் உறங்கி எழ வேண்டும்.

இந்த யோசனைகளை பின்பற்றுவோம்

நிம்மதியான உறக்கத்தைப்பெறுவோம்
By Dr.farook

No comments:

Post a Comment