அனைத்து நோய்களுக்கும் மூல காரணம்?

அஜீரண கோளாறுகள் தான் அனைத்து நோய்களுக்கும் மூல காரணம்
  பசித்து உண்ண வேண்டும், உண்டது ஜீரணம் ஆக வேண்டும்.

சரி, ஜீரணத்தை அதிகரித்து கொள்வது எப்படி?

உணவு நல்ல முறையில் ஜீரணிக்க முக்கியமான 3 காரணிகள்,

1. உண்ணும் முறை
2. உடல் நிலை
3. மன நிலை

1. உண்ணும் முறை.  
பசித்து உண்ணும் உணவு, இரண்டு முறையில் ஜீரணிக்கபட வேண்டும்.

1. வாயில்
2. வயிற்றில்
வாயில் சுரக்கும் உமிழ் நீர் மட்டுமே, உணவில் உள்ள சுவையை ஜீரணிக்கும் தன்மை படைத்தது. நாம் வாயில் மென்று சுவைக்கும் போது, நம்முடைய மண்ணீரல்,  அனைத்து சுவைகளையும் பிரித்து, உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கிறது.  வயிற்றினால் சுவைகளை ஜீரணிக்க இயலாது. சுவைக்கப்படாமல் விழுங்கும் உணவு, வயிற்றில் ஜீரணிக்கப்படாமல் கெட்டு போய்விடும். சிறு குடலுக்குள் இறங்காது. சிறுகுடலுக்கு செல்ல வேண்டிய பித்த நீர், வயிற்றுக்குள் இறங்கி, வயிற்றை புண்ணாக்கி விடுகிறது. பித்த ஏப்பம், வாந்தி ஏற்படவும் காரணமாகிறது.

 சுவைக்கப்படாமல் உணவை விழுங்குவதால், அதனை ஜீரணிக்க உமிழ்நீரும் வாயிலிருந்து வயிற்றுக்குள் இறங்குகிறது. தூக்கத்தில் உமிழ் நீர் மஞ்சள் நிறமாக தலையணையை நனைத்துவிடுவதற்கும் இதுதான் காரணம். இவர்கள் ஒரு வேளை உணவாவது தவிர்த்து கொள்வது நன்மை பயக்கும். தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பே உண்பது நல்லது.

புளிப்பு சுவையுள்ள உணவை தவிர்ப்பது, ஜீரணத்தை அதிகரிக்கும்.   அதி குளிர்ந்த நீரையும் தவிர்க்கவும்.

உணவு உண்டபின் ஏற்படும் சோர்வு, உடலின் பலஹீனத்தை குறிக்கும்.  சோர்வு ஏற்படாதவாறு அளவாக உண்பது நல்லது.  சோர்வு ஏற்படின் சிறிது ஓய்வு எடுத்து கொள்வதும் நல்லது.

உணவுக்கு முன் இனிக்கும் பழங்கள் எடுத்து கொள்ளலாம்.

உணவின் போது நீர் அருந்தாமல், உணவுக்கு அரை மணி நேரம் முன்னும், பின்னும் தண்ணீர் எடுத்து கொள்ளலாம்.

அடைத்து வைக்கப்பட்ட உணவை தவிர்ப்பதும், நல்ல உணவை விரும்புவதும் சிறந்தது.
கொடுக்கப்பட்ட உணவுக்கு, நன்றியுணர்வோடும், பயபக்தியோடும் உண்ணும் போது, தீமையான உணவும் நன்மையாக அமையும்.

"பசித்து புசி"
"நொறுங்க தின்றால் நூறு வயது"
"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு - அருந்தியது
அற்றது போற்றி உணின்."

எனவே, உணவை நன்கு மென்று, உமிழ்நீருடன கலந்து, நன்கு சுவைத்த பின்னர் , சக்கையாக மட்டுமே விழுங்க வேண்டும்.

இம்முறையில் தேவைக்கு அதிகமான உணவை நாம் உட்கொள்ளவதில் இருந்தும் பாதுக்காக்கப்படுகிறோம்.  உடல் பருமனை குறைக்க இதுவே சால சிறந்த முறை.

கவனத்தோடு உண்ணும்போது, இன்னும் பல ஞானங்கள், அவரவர் தன்மைக்கேற்ப புரிய வரும், நோயில்லாமால் வாழ்வதற்கு.

No comments:

Post a Comment