முருங்கை கீரையில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் மிகுதியாக உள்ளன. முருங்கை பூவைப் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட உடல் பலம் பெறும். முருங்கை காயை எந்த வகையிலாவது சமைத்து தொடர்ந்து சாப்பிட சளி குறையும்.
மருந்து எடுத்துக் கொள்ளும்போது கடைப் பிடிக்கப்படும் பத்தியத்தின் போது கூட முருங்கைப் பிஞ்சினை இளங்காரமாக சமைத்து சாப்பிடலாம்.
* முருங்கைக் கீரை எலும்புகளுக்கு பலம் தருவதாகவும் இளஞ்சிறார்களின் எலும்புகள் உறுதி பெறவும் தக்க சத்துள்ள உணவுப் பொருளாக விளங்குகின்றது.
* முருங்கைக் கீரை ரத்தத்தில் சேர்ந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வல்லது. எனவே சர்க்கரை நோயாளிகள் வாரத்தில் மூன்று நாட்களாயினும் முருங்கைக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொள்வதால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.
* முருங்கைக் கீரை வீக்கத்தைக் கரைக்கும் தன்மை உடையது என்பதால் உணவாகும் முருங்கைக் கீரை கை. கால்களில் ஏற்படும் வீக்கத்தைக் கரைத்துச் சீர் செய்யும்.
* முருங்கைக் கீரையை சூப்பாகக் கொதிக்க வைத்து சாப்பிட்டால் மூட்டுக்களின் தேய்மானத்தை சரி செய்கிறது. வாய்ப்புண், வயிற்றுப்புண், காய்ச்சல், கண் நோய்கள் குணமாகிறது.
முருங்கை மருந்தாவது எப்படி?
* முருங்கை இலை சாற்றுடன் (10 முதல் 20 மி.லி.) சம அளவு எலுமிச்சை சாறு சேர்த்து அன்றாடம் காலை வேளையில் குடித்து வருவதால் பல்வேறு நோய்கள் குணமாகின்றன். குறிப்பாக சத்துக்குறைபாடு, ரத்தசோகை, இருமல், ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு, நரம்புத்தளர்ச்சி, தோலின் வறட்சி ஆகியன குணமாகும். கை, கால்களின் வீக்கமும் தணியும்.
* நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தபோது முருங்கை கீரையோடு- இரண்டு பல் பூண்டு சிறிது மஞ்சள், உப்பு, மிளகு இவைகளை சேர்த்து அரைத்து உள்ளுக்கு சிறிது கொடுத்து கடிபட்ட இடத்தில் மேலுக்கும் சிறிதளவு தடவி வர நஞ்சு முறிந்து புண்ணும் விரைவில் ஆறிவிடும்.
வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
முருங்கை பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை.
முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்
பெண்களுக்கு வரும் சூதகவலிக்கு இதன் இலைச்சாறு பிழிந்து 30 மில்லி இரு வேளை குடிக்க குணமாகும். அடிவயிற்றில் வலியும், விலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.
இலையை ஆமணக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வாத மூட்டுவலி, இடுப்பு வலி, உஷ்ணத்தால் வரு வயிற்று வலி நீங்கும்
இவற்றில் உங்களுக்கு எது செய்ய முடியுமோ அதை செய்து பலன் பெறவும்...
No comments:
Post a Comment