கார்போஹைடிரேட்டுகள் சாப்பிட்டாலே..

கார்போஹைடிரேட்டுகள் சாப்பிட்டாலே கொஞ்ச நாளிலே சர்க்கரை வியாதி கன்டிப்பா வரும் என பதிவுகளை இப்போது பார்க்கிறேன். இது அடிப்படையிலே தப்பு. பிரச்சினைக்கு காரணம் சிக்கலான கார்போஹைடிரேட்டுகள் தான். ஏன்னா அந்த கார்ப்பை நாம் உட்கொள்ளும்போது நம்முடைய உடலால் அதை செரிக்க எவ்வளவு இன்சுலின் தேவைப்படும் என்பதை கணிக்க முடியாமல் ஏகத்துக்கும் உற்பத்தி செய்கிறது. அப்புறம் அந்த அதிகமான இன்சுலின் இருப்பதால் திரும்பவும் பசிக்கும். இப்படியே நடக்க ஆரம்பித்தால் விளைவு கொஞ்ச வருடங்களிலே சர்க்கரை வியாதி.

பசி மயக்கம், உண்ட மயக்கம் எல்லாம் வருவதுக்கும் இது தான் காரணம்.

அப்படீன்னா எளிதான கார்போஹைடிரேட்டுகளை சாப்பிட்டா பிரச்சினை இல்லையான்னா ஆமாம் பிரச்சினை இல்லை.

காய்கறிகள், பழங்கள், நாட்டுகிழங்குவகைகள், தயிர், நெய் , மோர் என சாப்பிட்டுவந்தா பிரச்சினை இல்லை. இதிலே தானியங்கள் இல்லை என பார்த்திருப்பீங்க. ஆனா என்ன சர்க்கரை ஏற்கனவே இருப்பவர்கள் இப்படி சாப்பிட்டா எடை குறையவும் பழைய நிலைக்கு திரும்பவும் ஒரு வருடம் ஆகலாம். சுத்தமா கார்ப்பை நிறுத்தினா ஆறு மாதத்துக்குள்ளே பழைய நிலைக்கு திரும்பிடலாம்.

மனிதன் தானியங்கள் பயிரிடுவது 5000 வருடத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டது என சொன்னாலும் கடந்த 500-1000 வருடங்களாகத்தான் பெருமளவிலே பயிரிடப்பட ஆரம்பித்தது. பெருமளவிலே பயிரிட அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்கள், அதற்கான கால்வாய்கள் என்பதே கடந்த 200 வருடங்களிலே தானே செய்யப்பட்டது. அதற்கு முன்னர் ஓரிரு வாய்க்கால்களும் அணைக்கட்டுகளும் தானே இருந்தன.

எனவே தானியத்தை செரிப்பது என்பதே மனித உடலுக்கு புதுசு. நாமோ காய்கறீ எதுவுமே சேர்க்காமல் ஒரு குண்டா சோத்த சாம்பார், ரசம், என ஊத்தி அடிச்சிருறோம். கூடவே காப்பி, டீ எல்லாத்திலேயும் சர்க்கரையை கிலோ கணக்கிலேபோட்டு பாயசம் ரேஞ்சுக்கே குடிக்கறோம். அப்புறம் என்னாகும்?

இங்கே சிக்கலான கார்ப் என சொல்லப்படுவது ஸ்டார்ச். அரிசியிலே ஆரம்பித்து உருளைக்கிழங்கு வரைக்கும் இருப்பது. அதை உடைத்து சின்ன மூலக்கூறான குளுக்கோஸாக மாற்றுவதைத்தான் நாம் செரிமானம் என்கிறோம். அதை வெளியே செஞ்சா புளிக்கவைத்தல். வயிற்றுக்குள்ளே செய்தால் செரிமானம். இரண்டும் பாக்டீரியாக்களாலேயே நடக்கிறது.

தானியம் சாப்பிட்டே ஆகவேண்டும் இருக்கும்போது புளிக்க வைத்த மாவால் செய்த இட்லி, தோசை போன்றவற்றை உட்கொள்ளலாம். புளிக்க வைப்பது என்பதே சிக்கலான கார்ப்பை எளிதான கார்ப் ஆக மாற்றுவதே. அதை விடுத்து நிலக்கடலை போன்றவற்றை சாப்பிட்டாலும் பிரச்சினை தான்.

இங்கே புளிக்க வைத்தது என சொல்லும்போது அரிசிமாவு புளிக்கவேண்டும். உளுந்து மாவு மட்டும் புளித்தால் போதாது. ஆனா நாம உளுந்து மாவு புளித்தவடனே எடுத்துவைச்சிடுவோம் ஏன்னா அது தான் சீக்கிரம் புளிக்கும். அரிசியும் புளித்த மாவு நல்ல புளித்த வாடை அடிக்கும். பலருக்கு சாப்பிட பிடிக்காது.

ஆனால் சிக்கலான கார்ப்பை உட்கொள்ளும்போது மரபணுவை பொறுத்து சிக்கல் வருவது தவிர்க்க முடியாதே. உடற்பயிற்சி செஞ்சாலும் வரும் ஏன்னா பிரச்சினை உடலால் இன்சுலின் தேவையை கணிக்க முடியாமல் போவது தான்.

ஆனா இத விட்டுட்டு சும்மா கார்ப் சாப்பிட்டாலே கொஞ்ச வருடத்திலே சர்க்கரை வியாதி வரும் என பயமுறுத்தக்கூடாது. அதிலும் கார்ப் எடுத்துக்கலன்னா இன்சுலினோ குளுக்கோஸோ உடலுக்குள்ளேயே இருக்காதுன்னும் சொல்லக்கூடாது.

சரி எது எளிதாக செரிக்கும் எது செரிக்காது என எப்படி கண்டுபிடிப்பது? பச்சையாக எதுவுமே செய்யாமல் கிடைப்பதை சாப்பிட்டு பசி ஆறும் என்றால் அது எளிமையான கார்ப். ஊறவத்து, புளிக்கவைத்து, அரைத்து, சுட்டு, சமைத்து சாப்பிடவேண்டும் என்றால் அது சிக்கலான கார்ப். அவ்வளவு தான் விஷயம்.

உடலுக்கு இன்சுலின் தேவையான ஒன்று. மனிதனின் சிந்திக்கும் ஆற்றல் இன்சுலினாலே தூண்டப்படுகிறது. உடலிலே இன்சுலின் இல்லாமல் போனால் நேரா டிக்கெட் தான்.

பேலியோவிலே இப்படி அடிப்படைய புரிஞ்சுக்காம ஏகத்துக்கும் இஷ்டத்துக்கும் அடிச்சு விடக்கூடாது. அப்புறம் இந்த தீடீர் குபீர் ஹீலர்களுக்கு போட்டியாயிடுவோம்.
https://m.facebook.com/story.php?story_fbid=10154951419378702&id=646028701

No comments:

Post a Comment