தண்ணீர் குடிக்கும் முறை

தண்ணீர் குடிக்கும் முறை

தாகமெடுக்கும் போது தண்ணீர் குடித்தாலும் அல்லது சாதாரணமாக தண்ணீர் குடித்தாலும், பாத்திரத்தை தூக்கி  அண்ணாந்து பார்த்து குடிக்க கூடாது. டம்ளரோ அல்லது சொம்பிலோ வாய்  வைத்து சப்பியே குடிக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு ஒரு நபர் குறிப்பிட்ட அளவு குடிக்க வேண்டும் என்று  கட்டாயம் இல்லை...

உங்களுக்கு எப்பொழுதெல்லாம் தாகம் எடுக்கிறதோ அப்போதெல்லாம் தண்ணீர் குடிக்கலாம்...
ஆனால் மேற்கண்ட முறையை பின்பற்ற வேண்டும்.

தாகமாக இருக்கும் நேரத்தில் அவசரமாக  அண்ணாந்து தண்ணீர் குடித்தால் 1லிட்டர் தண்ணீரை ஒரே நேரத்தில் மளமளவென்று குடித்தாலும் தாகம்  அடங்காது. ஆனால் மெதுவாக சப்பி குடித்தால்   1டம்ளர் நீரிலேயே தாகம்  அடங்கி விடும்...

தாகம் தொண்டைக்கு தான், வயிற்றுக்கு கிடையாது...  எனவே வயிறு நிறைய தண்ணீர் குடிக்காதீர்கள்...

உதாரணத்திற்கு மதுரையில் 40degree வெயில் நேரத்தில் ஒரு நபரால் 3லிட்டர் தண்ணீர் குடிக்க முடியும்...  ஆனால் அதே நபர் மறுநாள் ஊட்டிக்கு சென்று 10degree இருக்கும் போது நான் மதுரையில் 3லிட்டர் தண்ணீர் குடித்தேன், ஊட்டியிலும் 3லிட்டர் தண்ணீர் குடிப்பேன் என்று குடிக்க முடியாது...

அளவுக்கு அதிகமான தண்ணீர்  உடலை உப்ப வைக்கவும் ஊளை சதை போடுவதற்கும் மற்றும் cold sweat வருவதற்கு மட்டுமே உபயோகமாக இருக்கும்.

தகவல்: N.மகேஷ் ராஜா...

No comments:

Post a Comment