டைப் 1
டையபெடிஸ்- முளையிலேயே கிள்ளுவோம்
Dr. V. Hariharan, MBBS, MD (Biochemistry), Coimbatore
கணையத்தில் (pancreas) உள்ள
பீட்டா செல்கள் இன்சுலினை
உற்பத்தி செய்கிறது. இன்சுலின் ரத்த சர்க்கரை அளவுகளை
குறைக்கிறது. வைரல் இன்பெக்ஷன், மற்றும்
ஆட்டோ ஆண்டிபாடிகள் (அதாவது நம் வெள்ளை
அணுக்களே நம் செல்களுக்கு எதிராக
ஆண்டிபாடிகளை உற்பத்தி செய்வது) நம்
பீட்டா செல்களை அழித்து டைப்
1 டயாபெடிசை உருவாக்குகிறது.
Insulin autoantibodies, Islet cell antibodies, antibodies to
glutamate dehydrogenase போன்ற
ஆண்டிபாடிகள் நம் கணைய செல்களை
அழிக்கலாம்..
எந்த வயதினருக்கும் இந்தப் பிரச்சினை வரலாம்.
ஆனால் இது அதிகளவில் சிறார்களை
தாக்குக்கிறது. பீட்டா செல்கள் அழிவதால்,
இன்சுலின் உற்பத்தி மிகக் குறைந்து விடுகிறது.
தற்போதைய நவீன மருத்துவம், இவர்களுக்கு
இன்சுலினை ஊசி வழியாக போட
சொல்லி பரிந்துரைக்கிறது. இன்று வரை இது
ஒன்றே வழி.
பேலியோ
டயட் டைப் 1 பிரச்சினைக்கு எப்படி
உதவுகிறது? மாவுச்சத்து அதிகம் உண்பதால், இன்சுலின்
உற்பத்தி அதிகமாகி, இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் எனும் எதிர்ப்பு நிலை
வருவதால் டைப் 2 வருகிறது. பேலியோ
டயட்டில் மாவுச்சத்து கம்மி என்பதால், டைப்
2 பிரச்சினைக்கு பேலியோ ஒரு அருமையான
உணவுமுறை என்பது நாம் அறிந்ததே.
ஆனால் டைப் 1 டயாபெடிஸ்க்கு இந்த
தியரி உதவாது.
பேலியோ
போன்ற குறைந்த மாவுச்சத்து உணவு
எடுப்பதன் மூலம், டைப் 1 டயாபெடிக்காரர்கள், அவர்கள் இன்சுலின் தேவையை
வெகுவாக குறைக்க முடியும்.
சமீபத்தில்
வந்த ஒரு பேஷன்ட் ரிப்போர்ட்
நம்மை வியக்க வைக்கிறது. அதில்
பேலியோ எடுத்த ஒரு சிறுவனுக்கு
டைப் 1 டயாபெடிஸ் முற்றிலும் குணமாகி உள்ளது.அவர்
இப்போது ரெகுலர் மாவுச்சத்து உணவு
எடுத்தாலும் சுகர் அதிகமாவதில்லை.
http://www.ijcasereportsandimages.com/archive/2015/012-2015-ijcri/CR-10582-12-2015-toth/ijcri-1058212201582-toth-full-text.php
இந்த ரிப்போர்ட்டின்படி டைப் 1 டயாபெடிஸ் கண்டுபிடிக்கப்பட்ட
உடனே பேலியோ டயட் ஆரம்பித்தால்
இந்த வியாதி முற்றிலும் சரியாக
வாய்ப்பிருக்கிறது என
சொல்கிறது.
இது எப்படி சாத்தியம்?
வியாதி
வந்த மிக மிக ஆரம்ப
நிலையிலேயே இந்த டயட்டை
ஆரம்பிக்க வேண்டும். எந்த வயதாக இருந்தாலும்,
டைப் 1 டயபெடிஸ் வந்து விட்டால், உடனே
பேலியோ ஆராம்பிக்க வேண்டும்.
என்னுடைய
சில சிந்தனைகள்:
1. ஆண்டிபாடிகள்
பீட்டா செல்களை அழித்தாலும், அந்த
அழிவை வேகப்படுத்துவது அதிகமான ரத்த க்ளுக்கோஸ்
அளவுகள். அதாவது எரியும் தீயில்
எண்ணெய் ஊற்றுவது போல. அதனால் ரத்த
க்ளுக்கோஸ் அளவை பேலியோ மூலம்
நன்றாக குறைக்கும் போது, பீட்டா செல்களின்
அழிவு கொஞ்சமாவது தள்ளிப்போகிறது அல்லது தடுக்கப்படுகிறது(எரியும்
வீட்டிற்குள் சென்று சில நகைகளையாவது
மீட்பது போல)
2. பேலியோ
டயட் ஒரு antiinflammatory (உள்காயத்தை தடுக்கும்) டயட்டாகும். இன்பலமேஷன் ஆண்டிபாடிகள் உருவாக்கத்தில்/தூண்டி விடுதலில் பெரும் பங்கு வகிக்கிறது. பேலியோ
மூலம் இன்பலமேஷன் குறையும் போது, பீட்டா செல்கள்
அழிவது குறையும். அட்லீஸ்ட் ஒரு 30% பீட்டா செல்கள்
எஞ்சியிருந்தாலே இன்சுலின் ஊசி இல்லாமலேயே ஒரு
மனிதன் வாழலாம்.
3. சிலர்
பேலியோ டயட் கொடுப்பதன் மூலம்
புதிய பீட்டா செல்கள் உருவாகின்றன
என்கிறார்கள். அதில் எனக்கு நம்பிக்கையில்லை.
அதனால்
முளையிலேயே கிள்ளுவோம் வாருங்கள்
No comments:
Post a Comment