கொழுப்புக்கள்

       

      உடலில் இயற்கையாகவே கொழுப்புக்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த கொழுப்புக்கள் தான் ஆற்றலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் எப்போது ஒருவரது உடலில் உணவுகள் மூலம் கொழுப்புக்களின் அளவு அதிகமாகிறதோ, அப்போதே உடலின் இயக்கம் பாதிக்கப்படுவதோடு, ஆற்றலும் குறைய ஆரம்பிக்கும். ஒருவருக்கு மன அழுத்தம் மற்றும் வயிற்றில் புழுக்களின் அளவு அதிகமாக இருந்தால், உணவுகளின் மீது ஆவல் அதிகரிக்கும். எப்போது ஒருவர் அதிகளவு இனிப்பு உணவுகளை உட்கொள்கிறாரோ, அவரது உடலில் சளியின் அளவு அதிகரித்து, புழுக்கள் பெருகுவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும். இந்த சூழ்நிலையில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளும் பெருக ஆரம்பிக்கும். எனவே ஒவ்வொருவரும் தங்களது உடலில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைத்து, புழுக்களின் பெருக்கத்தைக் குறைக்கும் முயற்சியில் அடிக்கடி ஈடுபட வேண்டியது அவசியம். இக்கட்டுரையில் அதற்கான ஓர் அற்புத வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்: ஆளி விதை - 100 கிராம் உலர்ந்த கிராம்பு - 10 கிராம் செய்முறை: முதலில் ஆளி விதை மற்றும் உலர்ந்த கிராம்பை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.  பயன்படுத்தும் முறை: ஒரு டம்ளர் நீரில் 2 டேபிள் ஸ்பூன் அரைத்த பொடியை சேர்த்து கலந்து தினமும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் காலை உணவின் போது ஒரு டம்ளர் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பு: இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, தொடர்ச்சியாக 3 நாட்கள் இந்த பானத்தைக் குடிப்பதோடு, 3 நாள் இடைவெளி விட்டு, பின் மீண்டும் 3 நாட்கள் குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் முதல் ஒரு மாதத்தில் உடல் சுத்தமாகவும், நச்சுக்களின்றியும், புழுக்களின்றியும் இருப்பதை உணரலாம். மனதில் கொள்ள வேண்டியவை: எப்போதும் உடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபடும் போது, குடிக்கும் நீரின் அளவை அதிகரிப்பதோடு, ஜூஸ்களை அடிக்கடி பருக வேண்டும். அதோடு ஜங்க் உணவுகள் மற்றும் ஃபாஸ்ட் புட் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இன்றைய பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் மலச்சிக்கலால் துன்பப்படுகின்றனர். மலச்சிக்கல், ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல் நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு. நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச்சத்தற்ற மாவுப் பதார்த்தங்கள் ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. பெருங்குடலில் அதிகம் வாதம் உண்டாகிறது. குடலில் வாதமும், கழிவுகளும் தங்குவதால் மூலத்தில் சூடு ஏற்பட்டு புண்கள் உண்டாகின்றன. நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் 'மூலநோய்' (Piles) முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், வலி, ரத்தப்போக்கு, ரத்தசோகை எனப் பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள். தடுப்பது எப்படி : அடிக்கடி அசைவ உணவு வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காரம் அதிகமான உணவு ஆகாது. மசாலா நிறைந்த, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment