முடவாட்டுக்கால் சூப் பற்றி எப்போதோ படித்து இருந்தேன்.இந்தமுறை கொல்லிமலை சென்றபோது அங்குள்ள கடை ஒன்றில் முடவாட்டுக்கால் சூப் கேட்டு வாங்கி குடித்தேன்.சுவையோ சுவை !1! காரமாக,மிகவும் சுவையாக இருந்தது.குடித்தவுடன் மிகவும் புத்துணர்ச்சி வந்தது.எட்டுக்கை அம்மன் கோவிலுக்கு போகும் வழியில் அங்கு மூலிகைகள் விற்பவரிடம் “முடவாட்டுக்கால்” வேண்டும் என்றேன்.மிகவும் இரகசியமாக ஒரு பையில் போட்டுக் கொடுத்தார்.வனத்துறையினர் இதன்விற்பனையை தடுப்பதாக கூறினார்.கிலோ100 ரூபாய் என்று 2 கிலோ வாங்கிவந்தேன்.நாளைதான் சூப் செய்யவேண்டும்.
============================================
முடவாட்டுக்கால்
இந்த முடவாட்டுக்கால் மூலிகையை குறுக்கில் கால் இஞ்சு அளவிற்கு சிறு துண்டு வெட்டி தோலை சீவி நசுக்கி சிதைத்து தக்காளி சேர்க்காமல் , மிளகு ,சீரகம் மற்றும் ஆட்டுக்கால் சூப்பிற்கு சேர்க்கும் பொருட்களை சேர்த்து சூப்பாக வைத்துக் குடிக்க முழங்கால் வலி , கீழ் முதுகு வலி, கை மூட்டு வலி,கழுத்து வலிகள் இவைகள் தீரும். தினமும் இந்த சூப்பை பருகி வர உடலில் உள்ள எல்லா தொல்லைகளும் படிப்படியாகத் தீரும்.
இது ஒரு காளான் வகையைச் சேர்ந்தது .எனவே இதற்கு இலைகள் கிடையாது . இது கொல்லி மலையிலும் , கஞ்ச மலையிலும் , சதுரகிரி மலையில் சில இடங்களிலும் கிடைக்கிறது

No comments:
Post a Comment