மோர்க்களி

மோர்க்களி

தேவையானவை: புளித்த தயிர் - அரை கப், அரிசி மாவு - முக்கால் கப், மோர்மிளகாய் வற்றல் - 5, பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, கறிவேப்பிலை - 4, 5, மாவடு தண்ணீர் அல்லது ஊறுகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: அரிசி மாவையும் புளித்த தயிரையும் நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு தாளித்து, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும் மோர்மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர் விடவும். ஊறுகாய், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அரிசிமாவு, தயிர் கலவையைச் சேர்த்து கைவிடாமல் கிளறினால், அடியில் ஒட்டாதபடி சுருண்டு அல்வா பதத்தில் வரும். இறக்கி வைத்து, சுடச்சுட சாப்பிடவேண்டும்.



குறிப்பு: விரல் நுனியால் எடுத்து, நாக்கில் வைத்து ருசித்துச் சாப்பிட வேண்டும். கைதொடும் பதம், களியின் ருசி, காரம், உப்பு, புளிப்பு சுவை அருமையாக இருக்கும். காலை 10 மணிக்கு மோர்க்களி சாப்பிட்டு, தண்ணீர் குடித்துவிட்டால், வயிறு 'திம்’மென்றாகிவிடும்.

மருத்துவப் பலன்கள்: வெப்பத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய பாரம்பரிய உணவு இது.

No comments:

Post a Comment