குழந்தை இல்லாதவர்களுக்கு கர்ப்பம் தரிக்க வேப்பம்பூ இளகல்

குழந்தை இல்லாதவர்களுக்கு கர்ப்பம் தரிக்க வேப்பம்பூ இளகல் :-
குழந்தை இல்லாதவர்களுக்கு மலட்டுத் தன்மை நீங்கி கர்ப்பநம் தரித்து குழந்தை பிறக்கும்
தேவையான சரக்குகள் :
1 வேப்பம்பூ 20 கிராம்
2 குங்குமப்பூ 20 கிராம்
3 பனைவெல்லம் 100 கிராம்
செய்முறை :
வேப்பம் பூவை தும்பு தூசுகள் இல்லாதபடி சுத்தம் செய்து லேசாக வறுத்து தூள் செய்து கொள்ளவும் குங்குமப் பூவையும் கல்வத்தில் இட்டு மையாக நன்றாக அரைத்து வேப்பம் பூவையும் கூட்டி அரைத்துக் கொள்ளவும் பிறகு பனை வெல்லத்தையும் சேர்த்து உறவாகும்படி நான்றாக அரைத்துக் கொள்ளவும் இதை 9 - உருண்டை களாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
உபயோகம் :
மாதவிடாய் ஆன முதல் நாளிலிருந்து
காலை -மதியம் - மாலை 3 வேளைகள்
ஒவ்வொரு உருண்டையாக சாப்பிடவும்.
இவ்வாறு மூன்று நாட்களில் 9 - உருண்டைகளும் சாப்பிடவும்.
பால் அருந்தவும்.
கர்ப்பம் தரிக்கும் தரிக்காவிடில் மறுமுறையும் சாப்பிடவும்.
இவ்வாறு மூன்று மாதங்கள் வரை சாப்பிடலாம்
மருந்து சாப்பிடும் காலம் புலால் வகைகள் சாப்பிட கூடாது அதிக காரமும் சாப்பிட கூடாது.

No comments:

Post a Comment